மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவைத்தொகை முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டது: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: நிலுவைத் தொகையாக குறிப்பிட்டிருந்த தொகை நேற்று சம்பந்தப்பட்ட மின்வழங்கும் நிறுவனங்களுக்கு முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு PRAAPTI PORTAL-லில் 21ம் தேதி வரை (இன்று) வரை நிலுவைத்தொகையாக குறிப்பிட்டிருந்த தொகை நேற்று சம்பந்தப்பட்ட மின் வழங்கும் நிறுவனங்களுக்கு முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.

சூரிய ஒளி மின் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.65,23,83,453, காற்றாலை மின் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.8,75,43,384 வழங்கப்பட்டுள்ளது. தொகை வழங்கப்பட்ட விபரங்கள், PFC Consulting Ltd நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்

பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டபோது, தொகை செலுத்திய விபரங்களை நேற்று இரவுக்குள் POSOCO நிறுவனத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும், இன்று காலை முதல் மின்சந்தை மூலம் மின்சாரம் பெறுவது சரி செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

Related Stories: