ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ரூ.224 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. கடந்த 17ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,849க்கும், சவரன் ரூ.38,792க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராம் ரூ.4,850க்கும், பவுன் ரூ.38,880க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.28 குறைந்து ஒரு கிராம் ரூ.4,822க்கும், சவரனுக்கு ரூ.224 குறைந்து ஒரு சவரன் ரூ.38,576க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: