ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு எதிரொலி அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னை: ஆட்டோ டிரைவர் ராஜா கொலை வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார். திருவல்லிக்கேணி, மாட்டான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(45). இவர் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மதியம் திருவல்லிக்கேணி, விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் 13 பேர் கொண்ட கும்பல்வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவல்லிக்கேணி மாட்டான் குப்பத்தை சேர்ந்த ரவுடியும், கஞ்சா வியாபாரியான சூர்யா (25), அவரது சகோதரர் தேவா (23) உட்பட 13 பேரை கைது செய்தனர்.  

இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியான சூர்யா அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். மேலும் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை கைது செய்யாமல் அண்ணா சதுக்கம் சட்ட ஒழுங்கு இன்ஸ்ெபக்டர் ஸ்டாலின் அஜாக்கிரதையாக இருந்தால் ஆட்டோ டிரைவர் ராஜா கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இது குறித்து அறிக்கை சென்னை போலீஸ் கமிஷனருக்கு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கமிஷனர் சங்கர் ஜிவால் காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியை கண்காணித்து கைது செய்யாததால் அண்ணா சதுக்கம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுத்தும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: