தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி  மற்றும் ஒடிசா அருகே குறைந்த காற்றழுத்தம் நீடிப்பதன் காரணமாக  இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்று கனமழை பெய்தது. அதில், அதிகபட்சமாக திருவள்ளூரில் 60 மிமீ மழை  பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Related Stories: