திருமுல்லைவாயல் துணை மின் நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகள்; காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

புழல்: திருமுல்லைவாயல் துணை மின் நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகளை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம்  முதல்வர் திறந்து  வைத்தார். தமிழகத்தில் நிறுவப்பட்ட புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று காணொலி மூலம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் அடுத்த வெள்ளானூர் ஊராட்சியில் உள்ள திருமுல்லைவாயல் துணை மின் நிலையத்தில் 10 எம்விஏ மின்மாற்றி - 16 எம்விஏ திறனாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு, சென்னை மேற்கு மேற்பார்வை பொறியாளர் அசோகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், ஆவடி கோட்ட செயற்பொறியாளர் அருணாசலம், சிட்கோ திருமுல்லைவாயல் உதவி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், செங்குன்றம் உதவி செயற்பொறியாளர் நந்தினி தேவி, ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் மற்றும் ஆவடி மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து உதவி பொறியாளர்கள்,கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர்: மணலி மண்டலம், மாத்தூர், எம்எம்டிஏ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு, தடையில்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில், மாதவரம் உபகோட்டத்திற்குட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் உள்ள, துணை மின் நிலையத்தில் திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றியை உருவாக்க தமிழ்நாடு மின்வாரியம் திட்டமிட்டது. அதன்படி ரூ.1.20 கோடி செலவில் புதிய மின்மாற்றி இங்கே அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் இந்த மின்மாற்றியை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதை அடுத்து சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் காசிநாதன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர், செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன்,உதவி செயற்பொறையாளர் அருணாசலம் ஆகியோர் மின்மாற்றியின் பணியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Stories: