திருப்பதியில் ரூ.300 தரிசனத்துக்கு நாளை முன்பதிவு

திருமலை: திருப்பதியில் அக்டோபர் தரிசனத்துக்கான ரூ.300 டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதில் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால், 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மற்ற நாட்களுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளவும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: