சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மனோஜ் தனது மகன் யுவன் மனோஜுக்கு சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். அக்டோபர் மாதம் தன் மகனை பள்ளியில் சேர்க்க உள்ளதால் அதற்குள் சாதி மதம் இல்லை என தரக்கோரி இருந்தார். மனோஜ் கோரியபடி அம்பத்தூர் தாசில்தார் சான்றிதழை வழங்காததால் சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Related Stories: