சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!

மதுரை: மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ல் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐ தரப்பில் 2027 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிபிஐ தரப்பில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் துணை குற்றப்பத்திரிகை மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில்  தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் ரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் காவல்துறை வீசியதாக குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட போலீசார் பொதுவான நோக்கத்துடன் குற்றவியல் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். ஜெயராஜ் -பென்னிக்ஸ் இருவரையும் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 7 காவலர்கள் துன்புறுத்தினர். இருவரின் காயங்களில் இருந்து ரத்தம் கசிந்தது. ரத்தக்கறைகளை சுத்தப்படுத்த பென்னிக்ஸ் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: