டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராகுல் காந்தி, பிரியங்கா, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து சுதந்திர தின கவுரவ யாத்திரை தொடங்கிய அவர்கள், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். காங்கிரஸ் தொண்டர்களும் மூவர்ண கொடியை கையில் ஏந்திக்கொண்டு யாத்திரையில் பங்கேற்றனர்.

காந்தி வாழ்ந்த இல்லத்தில், அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திறந்தவெளியில் கூடிய அவர்கள் சுதந்திர தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனிடையே, ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தாய்நாட்டுக்கு தலை வணங்குவதாக அவர் கூறியுள்ளார். பாரத நாட்டின் சேவைக்காக நாம் புதிதாக இணைந்திருப்போம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories: