இந்திய நாட்டின் 75வது சுதந்திர நிறைவு தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து..!!

வாஷிங்டன்: நாட்டின் 75வது சுதந்திர நிறைவு தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல், மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது என கூறியுள்ளார். இந்திய - அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள ஜோ பைடன், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: