அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை ரசாக் கார்டன் பகுதியில் உள்ள பெட் பேங்க் என்னும் தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் பிரபல தனியார் வங்கி லாக்கரில் இருந்த சுமார் 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; அரும்பாக்கம் வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

வங்கி கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகிறோம். ஓரிரு நாட்களில் திருடு போனவற்றில் எஞ்சிய 14 கிலோ நகைகள் மீட்கப்படும். வங்கி கொள்ள தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 3 பேர் மட்டுமே வங்கிக்குள் வந்து கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்தவர்கள் மதுரவாயல் வழியாக பல்லாவரம் சென்றுள்ளனர். வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெறவில்லை, கத்தி வைத்திருந்தனர். ஆனால் அதை பயன்படுத்தவில்லை.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை. குளிர்பானத்தில் தூக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். 6 முதல் 7 பேர் வரை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளை நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த 10 நாட்களாக கொள்ளைக்கு திட்டம் தீட்டியுள்ளனர் இவ்வாறு கூறினார்.

Related Stories: