சுதந்திர போராட்ட தியாகிகள் உதவிதொகையை ரூ.5000 உயர்த்த வேண்டும்: அரசுக்கு வாரிசுகள் கோரிக்கை

சென்னை: சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான உதவி தொகையை ரூ.5000 உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தியாகிகளின் வாரிசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் அமைப்பு தலைவர் நா.விஜயராகவன் வெளியிட்ட அறிக்கை: 75வது சுதந்திர தினவிழா கொண்டாடும் இந்த நேரத்தில் தற்போது மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை மேலும் ரூ.5000 உயர்த்தி தர வேண்டும்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கி வரும் உதவிதொகையோடு மாநில அரசு வழங்கும் உதவி தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

தியாகிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மருத்துவப்படி ரூ.500ஐ ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகி

களின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து வருகிறது.

ஆனால் தியாகிகளின் மகன்கள், மகள்கள் இதை பெற முடியாத சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்கப்படும் வீட்டுமனை, காலிமனை ஒதுக்கீட்டில் தனியாக 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: