இளநீர் புட்டிங்

செய்முறை

இளநீர் உடைத்து தண்ணீரை தனி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அவலை மிக்ஸியில் ஒன்றும் பாதியாக உடைக்கவும். இளநீரில் இருக்கும் தேங்காயை பொடிப்பொடியாக நறுக்கவும். அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் படியாக இளநீரை ஊற்றி அதில் நாட்டுச்சர்க்கரை, முந்திரிப்பருப்பு நறுக்கிய தேங்காய், உப்பு அனைத்தையும் போட்டு கிளறவும். ஊறிய அவலுடன் நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை தூள் போட்டு கிளறவும். பிறகு ஒரு தட்டில் கொட்டி ஒரு இன்ச் கனத்திற்கு பரப்பவும். அதன் மேல் இளநீர் கொஞ்சம் தெளிக்கவும். அவல் கொஞ்சம் கொஞ்சமாக இள நீரை உறிஞ்சி உறிஞ்சி மிருதுவாக மாறும். 20 நிமிடங்கள் கழித்து கேக் போல வெட்டி சாப்பிடவும்.

Related Stories: