மாமல்லபுரத்தில் பட்டம் விடும் விழா தொடங்கியது: இன்று முதல் 3 நாட்களுக்கு விழா நடைபெற உள்ளது...

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை அருகே பட்டம் விடும் விழா தொடங்கியுள்ளது. இந்த பட்டம் விடும் விழா 3 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று முதல் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. குறிப்பாக, குஜராத், கர்நாடக போன்ற மாநிலங்களில் பட்டம் விடும் விழா நடைபெற்றிருந்தாலும் கூட தற்போது தமிழகத்தில் முதன் முறையாக நடைபெறுகிறது. இந்த பட்டம் விடும் விழாவிவை சுற்றுலா துறை அமைச்சர் தொடங்கிவைத்தார். இந்த பட்டம் விடும் விழாவில் தாய்லாந்த், அமெரிக்கா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த 10 அணிகள் கலந்துக்கொண்டுள்ளன. குறிப்பாக, இந்தியா சார்பாக 6 அணிகளும் மற்றும் அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகள் சார்பாக 4 அணிகளும் பட்டம் விடும் விழாவில் பங்கேற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த விழாவை பார்ப்பதற்கு 3000 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு 8000 பேர் வந்து பட்டம் விடும் விழாவை கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: