ஈஷா யோகா மையம் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.2.5 கோடியை ரூ.44 ஆயிரமாக குறைத்த தீர்ப்பாயத்தின் முடிவு ரத்து

சென்னை:  கோவையில் உள்ள ஈஷா பவுண்டேசன் அமைப்பு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஜிஎஸ்எம் பிஆர்ஐ இணைப்பை பெற்றிருந்தது. அதன் மூலம்  ஈஷா மையத்திற்குள் 500 உட்கட்டமைப்பு இணைப்புகளை பயன்படுத்தியதற்காக ரூ.2 கோடியே 50 லட்சத்து 47,462 கட்டணம் செலுத்த வேண்டும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 2017ல் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த வழக்கு சமரச தீர்ப்பாயத்திற்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, இருதரப்பிடமும் விசாரணை நடத்திய தீர்ப்பாயம், 44 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்று உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கோவை முதன்மை பொதுமேலாளர் சென்னை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி 44 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பாய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: