மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் தேசியக்கொடி சேர்க்கும் பணி தீவிரம்

மதுராந்தகம்: நாடு சுதந்திரம் பெற்று 75ம் ஆண்டை முன்னிட்டு, நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்கும் பணிகள் மும்முரமாகரமாக நடைபெற்று வருகின்றன. மதுராந்தகம் நகராட்சி அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், கருங்குழி பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு கொடிகளை கொண்டு சேர்க்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிது.

இதனை தொடர்ந்து, மதுராந்தகம் நகராட்சியில் அதிகாரிகள், நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் கொடிகளை வீடுகள் தோறும் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், ஒன்றிய பெருந்தலைவர்கள் துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலர்கள் ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர். பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலைவர்கள், அதிகாரிகள் வார்டு உறுப்பினர்கள் என பல தரப்பினரும் ஒவ்வொரு வீடுகள் தோறும் கொடிகளை கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: