காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூருக்கு செவாலியர் விருது

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூருக்கு செவாலியர் விருது வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் கடந்தாண்டு ஏற்பாடு  செய்திருந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம்  எம்பியுமான சசி தரூர் பிரெஞ்சு மொழியில் பேசினார்.

இவரது புலமையால் அவர்  கவுரவிக்கப்பட்டார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனின், சசி தரூருக்கு வழங்கப்படும் விருது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்தியா வரும்போது, இந்த விருது சசிதரூருக்கு வழங்கப்படும்.

விருது குறித்து சசிதரூர் வெளியிட்ட பதிவில், ‘பிரான்ஸ் மொழி மற்றும் கலாசாரத்தை மதித்தும், பிரான்ஸுடனான உறவை மிகவும் மதிக்கும் நபர் என்ற வகையில், எனக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: