கிரிமினல் வழக்குகளில் சிக்கும் எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு வாழ்நாள் தடை வருமா? பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ளவர்கள் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படும்போது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகளில் மீண்டும் எம்எல்ஏ, அமைச்சராக கூட பதவி வகிக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘சாதாரன போலீஸ் கான்ஸ்டபிள் கூட தண்டனைக்கு உள்ளான பின்னர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். ஆனால், அரசியல்வாதிகளுக்கு அப்படி கிடையாது. ,’ என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘குற்றப் பின்னனியில் உள்ள எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கலாமா, வேண்டாமா? என்பது விரைவில் பரிசீலனை செய்யப்படும்,’ என தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: