ஊதிய ஒப்பந்த விவகாரம் 16ம் தேதி உண்ணாவிரதம்: அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தமிழக அரசு தொடர்ந்து ஒத்தி வைக்கிறது. அதனை இறுதி செய்வதற்கான நடவடிக்கையை போக்குவரத்துத் துறை மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஆக.16ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம், சென்னை, பல்லவன் இல்லத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்கப் பேரவை அலுவலகத்தில் இன்று (ஆக.10) நடைபெறுகிறது. இதையடுத்து, காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று மாநிலம் தழுவிய அளவில் போக்குவரத்துக் கழக தலைமையகங்கள் முன் உண்ணாவிரதம் நடைபெறும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Related Stories: