இலங்கை பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும்: சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: இலங்கையின் வடகிழக்கில் உள்ள ஈழத் தமிழர்களுக்காக இந்தியா தலையிட்டு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்திட வேண்டும். சீனாவின் உளவு கப்பல் இலங்கையின் கடற்பகுதியில் நிற்க இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சே அனுமதி வழங்கியுள்ளார். இது ஏற்புடையதாக இல்லை. இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். ஐநா மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்படாத அனைத்து தீர்மானங்களையும் இலங்கை அமல்படுத்த வேண்டும்.

Related Stories: