கும்பகோணம் கோயிலில் திருடப்பட்ட 12ம் நூற்றாண்டு பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: இந்தியா கொண்டு வர தீவிர முயற்சி

சென்னை:கும்பகோணம் அடுத்த தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில், 12.5.1971ம் ஆண்டு பார்வதி சிலை உட்பட 5 ஐம்பொன் சிலைகள் திருடுபோனதாக நாச்சியார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கோயில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சியில் இந்த கோயிலுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் ஏலத்தில் பார்வதி சிலை ஒன்று ஏலத்தில் விட முயற்்சி எடுக்கப்பட்டது தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான குழுவினர், சிலையின் புகைப்படம் மற்றும் குறிப்புகள் வைக்கப்பட்டிருந்த பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்துக்கு சென்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ள பார்வதி தேவியின் சிலையின் புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோயில் இருந்து திருடப்பட்ட 5 சிலைகளில் ஒன்றான பார்வதியின் சிலை என உறுதியானது. இதைதொடர்ந்து சிலை குறித்து ஆவணங்கள் அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல மையத்திற்கு அனுப்பி, அதை மீட்டு தமிழகம் கொண்டு வர ‘யுனெஸ்கோ’ ஒப்பந்தத்தின் படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: