தொடர் விடுமுறை எதிரொலி ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் வார விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்து படகில் சவாரி செய்தும், இயற்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் பொழுதுபோக்கியும் மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஏலகிரி மலைக்கு வந்து பொழுது போக்கி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர். இங்குள்ள படகுத்துறை சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்குக் கூடங்கள் மற்றும் தனியார் பொழுதுபோக்கு கூடங்களை கண்டு களித்தனர்.  குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சிறுவர் பூங்கா இயற்கை பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் குடும்பத்துடன் அமர்ந்து பல்வேறு விளையாட்டு உபகரணங்களில் விளையாடி உற்சாகமடைந்து உணவு பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர். மேலும் கடந்த வாரம் 9-வது வளைவில் திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மணி கணக்கில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதனால் கடந்த வாரம் சுற்றுலா தளம் வேறுச்சோடி காணப்பட்டது. மேலும் தற்போது 9-வது வளைவு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கப்பட்ட தகவல் அறிந்து கடந்த வாரம் திரும்பி சென்ற சுற்றுலா பயணிகள் நேற்று ஏலகிரி மலைக்கு வந்து பல்வேறு இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். இதற்காக கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கார், வேன் மூலமாக சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்தனர்.

இதனால் ஏலகிரி மலை 14 சாலைகளிலும் கீழ்பகுதியில் இருந்து மலையை நோக்கி பார்க்கும் போது வாகனங்களின் போக்குவரத்து கண்பார்வைக்கு கண்கொள்ளாக் காட்சியாக காட்சி அளித்தது. புங்கனூர் படகுத்துறை ஏரியை சுற்றி முட்புதற்களாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் படகுத்துறை ஏரியை சுற்றி பார்க்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் படகுத்துறை சுற்றிலும் பாதுகாப்பு கட்டமைப்பு சுற்றுச்சூழல் ஏற்படுத்தி முட்புதர்களை அகற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: