சிவகங்கை மாவட்டம் முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவுதினம் அனுசரிப்பு-திமுகவினர் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினர்

சிவகங்கை/காரைக்குடி :  சிவகங்கை மாவட்டம் முழுவதும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்புவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட துணை செயலாளர், பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். அமைதிப் பேரணி நடத்தப்பட்டு கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்டோருக்கு தென்னங்கன்று மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி, பேரூர் செயலாளர் நாகூர்கனி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், பிச்சைமணி, வெங்கடேசன், சுப்பையா, ஈஸ்வரன், அக்கினிராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு திமுக நகர் செயலாளர், நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து, கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன் மற்றும் நிர்வாகிகள், நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட் முன்பு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார்.

காரைக்குடி: காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர்மன்ற தலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் குணசேகரன், நகர அவைத்தலைவர் சன்சுப்பையா, நகரதுணைச்செயலாளர்கள் கண்ணன், லட்சுமி, ராசு, மாவட்ட பிரதிநிதிகள் சொக்கலிங்கம், ஜான்கென்னடி, சேவியர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிகண்ணாத்தாள், தெய்வாணைஇளமாறன், மாவட்ட மாணவர்அணி துணை அமைப்பாளர், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர், பொறுப்பு துணைத்தலைவர் பாண்டியராஜன், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரைசுரேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் பொறியாளர் சேதுராமன் நன்றி கூறினார். பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பள்ளத்தூர் பேரூராட்சி திமுக சார்பில் முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர அவைத்தலைவர் ராமு, துணைசெயலாளர் ராஜேந்திரன், ஆண்டியப்பன், கலைமணி, பொருளாளர் வைரவன், ஒன்றிய பிரதிநிதி செல்லையா, சேகர், சந்திரன், இலக்கியஅணி முருகானந்தம், ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சின்னத்துரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கருஅசோன், ஒன்றிய சேர்மன் சொர்ணம் அசோகன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் மாலை அணிவிக்கப்பட்டது.கல்லல் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

தி.சூரக்குடி ஊராட்சி வ.சூரக்குடியில் மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ஏஆர்.முருகப்பன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கிளை செயலாளர் சூரக்குடி பழனியப்பன், சூரக்குடி சொர்ணம், சந்திரன்சேகரன், பழனியப்பன், சூரக்குடி கோவிந்தசாமி, பிரதிநிதி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இலுப்பைக்குடி ஊராட்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் முத்துராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசு, துணைத்தலைவர் திருநெல்லைரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே குன்றக்குடியில் பேருந்து நிறுத்தம் அருகில், கல்லல் திமுக ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன் தலைமையில் திமுக கட்சி கொடியேற்றி, கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கிளை செயலாளர்கள் பெத்த பெருமாள், சுப்பிரமணி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், மகளிர் அணி சித்ரா மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருப்புத்தூர் பேருந்து நிலையம் எதிர்புறம் நடந்த நிகழ்ச்சியில், திருப்புத்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், யூனியன் சேர்மனுமான சண்முகவடிவேல் தலைமையில் கட்சி கொடியேற்றி, கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இளையான்குடி:இளையான்குடியில் நகரச் செயலாளர் நஜூமுதின், இளையான்குடி வடக்கு ஒன்றியம் செந்தமிழ் நகரில் முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், பெரும்பச்சேரியில் திமுக கவுன்சிலர் முருகன் தலைமையில் கலைஞரின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழரசன், காளிமுத்து, தெட்சிணாமூர்த்தி, இப்ராஹீம், தௌலத், கமால், ரகூப், சாரதி, கண்ணன், பழனி ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் கலைஞர் படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து ஊர்வலமாக பேருந்து நிலையம் முன்புள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமை வைத்தார். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர அவைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், நகரச் செயலாளர் கதிர்வேல், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர பொருளாளர் செந்தில் கிருஷ்ணன், அலாவுதீன், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: