வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதியை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

என்றும் சத்தீஸ்கர், கோவா, மேற்கு மத்தியப்பிரதேசம், கிழக்கு மத்தியப்பிரதேசம், மற்றும் குஜராத் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக எந்த வகையிலும் தமிழகத்திற்கு கனமழை முதல் அதீத கனமழையோ அல்லது ஏதேனும் ஆபத்தோ இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: