வேலூர் கோட்டையில் பரபரப்பு கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்ட பெண் காவலர்கள் மயங்கி விழுந்தனர்

வேலூர் : வேலூர் கோட்டையில் காவலர் பயிற்சிப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2ம்நிலை பெண் காவலர்கள் கடந்த சில மாதங்களாக பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு தினமும் துப்பாக்கி சுடுதல், தற்காப்பு, கலவரம் தடுத்தல், கமாண்டோ பயிற்சி என பல்வேறுகட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இறுதிக்கட்டமாக கமாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை 300க்கும் மேற்பட்ட பெண் பயிற்சி காவலர்கள் கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அவர்களில் அடுத்தடுத்து 5 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை பயிற்சி பள்ளி போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்ைச அளித்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று திரும்பினர்.  இதுகுறித்து காவலர் பயிற்சி பள்ளி உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘கமாண்டோ பயிற்சி என்பது மிக கடினமானது. இந்த பயிற்சிக்கு முழு உடல் திறன் இருக்க வேண்டும். ஆனால் சிலரது உடல்நலத்தில் குறைபாடு இருப்பதால் மயக்கம் ஏற்பட்டது. இது சாதாரண மயக்கம் தான். அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்’ என்றனர்.

Related Stories: