போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்;‘பேடிஎம், க்யூஆர் கோடு’மூலம் அபராதம் செலுத்தும் வசதி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் ‘பே டிஎம், க்யூஆர் கோடு’மூலம் அபராதம் வசூலிக்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் இருந்து ‘பே டிஎம், க்யூஆர் கோடு’ மூலம் அபராதம் வசூலிப்பதை எளிதாக்கும் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ேநற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி.சரத்கர், தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன் மற்றும் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியில் பேசியதாவது: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை வாகன ஓட்டிகள் இனி பேடிஎம், க்யூஆர் கோடு மூலம் செலுத்தும் புதிய விசதி தொடங்கப்பட்டுள்ளது. 300 போக்குவரத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு க்யூஆர் கோடு அட்டைகள் வழங்கப்படும்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் இந்த கார்டுகளிலிருந்து க்யூஆர் கோட்டை தங்கள்  செல்போனில் ஸ்கேன் செய்யலாம் அல்லது பேடிஎம் ஆப் இ-சலான் பக்கத்திற்கு செல்லும் பயனாளிகள் சலான் ஐடி மற்றும் வாகன எண்ணை உள்ளிட்டு யூபிஐ உட்பட அனைத்து கட்டண முறைகளையும் பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம். இதுகுறித்து 200 போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர புதியதாக தொடங்கப்பட்டுள்ள 12 கால் சென்டர்களில் 18 க்யூஆர் கோடு ஸ்டாண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை அபராத தொகையை திருப்பி செலுத்ததாதவர்கள் அழைத்து அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்.  எனவே போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தி அபராதத்தை உடனுக்குடன் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: