மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகரணங்களை உடனே வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகரணங்களை உடனே வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சீருடையை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போதுதான் நூலே வழங்கப்பட்டுள்ளது. எப்போது இந்த நூல் துணியாகி, துணி ஆயத்த சீருடையாகி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்காக ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்தை இதுவரை செயல்படுத்த முனைப்பு காட்டவில்லை அரசு. இது தவிர பேனா, பென்சில், க்ரேயான்ஸ், ஸ்கெட்ச் பென்சில், ரப்பர், பரிட்சை அட்டை, காலணி போன்ற பிற உபகரணங்களும் இதுவரை முழுமையாக வழங்கப்படாமல் உள்ளன. மாணவ செல்வங்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா அனைத்து கல்வி உபகரணங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: