நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

நெல்லை : நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமில் பாளையங்கோட்டை 33வது வார்டு பெருமாள் சன்னதி தெரு பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தங்கள் தெருவில் குப்பைகளை அகற்றிடவும், குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதை தடுத்து சீரான குடிநீர் வழங்கிடவும், பாளை குலவணிகர்புரம் பாண்டிதுரை 3வது தெருவை சேர்ந்த ஜெயராமன் அளித்தமனுவில், தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்.

பாளையங்கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை அளித்த மனுவில், பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர கேட்டும், சி.என்.கிராமத்தை சேர்ந்த சங்கரன், டவுன் பெருமாள் கீழரவீதி சூரியவடிவு ஆகியோர் அளித்த மனுவில் புதிய வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க கேட்டும், பாளை மகாராஜாநகர் வேலவர் காலனி பொதுமக்கள் அளித்த மனுவில் தங்கள் பகுதிக்கு தெரு மின்விளக்கு அமைத்து தர கேட்டும் மனுக்கள் அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மேயர் பி.எம்.சரவணன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.இம்முகாமில் உதவி ஆணையாளர் (கணக்கு) சொர்ணலதா, பாளை மண்டல உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி, பைஜூ உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: