தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, ஈரோடு, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி, சிவகங்கை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரியில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குமரி, நெல்லை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறையில் தலா 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: