திருச்சூர் சாலக்குடி ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் காட்டு யானை; மீட்பதில் நீடிக்கும் சிக்கல்.. மீட்க அதிகாரிகள் தீவிரம்..!

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடி ஆற்று வெள்ளத்தில் சிக்கித் காட்டு யானை தவித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கேரளாவில் மழைப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மழைநீரில் தத்தளிக்கின்றன. இதுமட்டுமின்றி அங்குள்ள டம்கள் எல்லாம் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதேபோல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சூர் சாலக்குடி ஆற்று வெள்ளத்தில் நேற்று ஒரு யானை அடித்து வரப்பட்டுள்ளது.

அப்போது ஆற்றின் ஒரு மேட்டு பகுதியில் யானை நின்று கொண்டது. இதனை மீட்க வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த ஆற்றில் தற்போது வரை நீரின் வேகம் குறையாததால் யானையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது காட்டு யானை என்பதால் அதன் நடவடிக்கைகளை அறிந்து மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆற்றின் நீரின் அளவை குறைத்து யானையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: