வாக்காளர் பட்டியலில் இளைஞர்கள் இடம் பெறுவதற்குரிய வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் இளைஞர்கள் இடம் பெறுவதற்குரிய வாய்ப்புகளை அதிகளவில் இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அவையாவன-

* பதிவு செய்வதற்கு வருடத்திற்கு நான்கு வாய்ப்புகள் - தகுதியேற்படுத்தும் நாளான ஜனவரி 1-க்காக மட்டுமே காத்திருக்க வேண்டியதில்லை. (ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1)

* 17 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கும் வசதி.

* 01.08.2022 முதல் பயனர்களுக்கு ஏற்ற வகையில், வாக்காளர்  எளிதில் பதிவு செய்வதற்கான புதிய படிவங்கள்.

* தேவைப்படின், பதிவுகளைத் திருத்துவதற்கு ஒரே படிவமாக படிவம் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது.

·

* வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க தன்னார்வ அடிப்படையில் ஆதார் எண் சேகரிப்பு

* ஒரே நபரின் ஒத்த பதிவு(DSE)கள், ஒரே புகைப்படத்தின் ஒத்த பதிவு (PSE)கள் ஆகியவற்றை  நீக்குவதில் கவனம் செலுத்துதல்.

* வருடாந்திர சுருக்கமுறைத் திருத்தத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் முன்திருத்த நடவடிக்கை தொடங்கும்.

* இந்தியத் தேர்தல் ஆணையம் 6, 6A, 6B, 7 மற்றும் 8 போன்ற பல்வேறு படிவங்களைப் பயனர்களுக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட படிவங்கள் ஆகஸ்டு 1, 2022 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் () தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் () கிடைக்கப்பெறும்.

    

* இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு ஏதுவாக, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்த அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரி/ வாக்காளர் பதிவு அலுவலர்/ உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்கைக்குப் பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலின் 2023-ஆம் ஆண்டுக்குரிய திருத்தம், 2023-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிக்குள் 18 வயதை அடையும் குடிமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்கலாம்.

 

* இந்தியத் தேர்தல் ஆணையம், முற்றிலும் தன்னார்வ அடிப்படையில் ஆதார் விவரங்களைச் சேகரித்து தற்போதுள்ள வாக்காளர்களின் விவரங்களுடன் இணைத்து, வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கும் பணியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர், படிவம் 6B-ஐ பூர்த்தி செய்து, உரிய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது NVSP, VHA போன்றவற்றின் மூலம் நிகழ்நிலையிலோ (Online) சமர்ப்பிக்கலாம்.  விவரங்களைச் சேகரிக்கும் பணி 01.08.2022 அன்று தொடங்கி 01.04.2023-க்கு முன் நிறைவு செய்யப்படும்.

* ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தின்போது, அதாவது 09.11.2022 முதல் 08.12.2022 வரையிலான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2023-இல் அனைத்து தகுதியுள்ள குடிமகன்களும் தனது பெயரைப் பதிவு செய்யவோ, ஏற்கெனவே உள்ள பதிவில் நீக்கம் /திருத்தம் /இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்கவோ படிவம் 6, 6B, 7 மற்றும் 8-ஐ கீழ்க்கண்டவாறு சமர்ப்பிக்கலாம்:

(i)    ஏதேனுமொரு அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைஅலுவலர்/ வாக்காளர் பதிவு அலுவலர்/ உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம்.

(ii)    உரிய வாக்குச்சாவடி நிலையங்களில் நடக்கும் சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம். (சிறப்பு முகாம் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்)

(iii)    அலுவலக நாட்களில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த ஏற்புரை மற்றும் மறுப்புரை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் வழங்கலாம்.

    

* இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA) நியமிக்க வேண்டும். அம்முகவர்கள் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2023 மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம். வாக்குச் சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம்.

8. 2023-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்திற்குரிய பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அட்டவணை தொடர்பான விளக்கக் காட்சி (Power Point) அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது காண்பிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2023-இன் பல்வேறு புதிய அம்சங்களை விளக்கி, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் சந்தேகங்களை தெளிவுபடுத்தினார்.

Related Stories: