போதை பொருட்களை தடை செய்யக்கோரி சென்னையில் பாமக ஆர்ப்பாட்டம்; அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை தடுக்கக்கோரி பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள், போதை பொருட்களை தடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது; தமிழகத்தில் 38 மாவட்டங்களில் போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் என்னுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அடுத்த தலைமுறைறையும் இளைஞர்களையும் காப்பாற்றும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். பள்ளி, கல்லூரி வாசல்களில் போதை பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. எனவே, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க முதல்வரும் போலீசாரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு பேசினார்.

Related Stories: