உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 127 பேரில் 66 நீதிபதிகள் நியமனம்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 127 பேரில் 66 நீதிபதிகளை மட்டும் ஒன்றிய அரசு நியமித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 டிசம்பர் 1ம் தேதி முதல் கடந்த 26ம் தேதி வரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் 140 பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

இதில், 127 புதிய பரிந்துரைகளில் 61 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 66 பெயர்கள் சமீபத்தில் பரிந்துரை செய்யப்பட்டவை. அவற்றை அரசு பரிசீலித்து வருகிறது. இவற்றில், 13 பரிந்துரைகள் அரசால் நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன. அவற்றில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: