தமிழகத்தில் 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அகமதாபாத் சென்றார் பிரதமர் மோடி

சென்னை: தமிழகத்தில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானத்தில் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் நேற்று  அண்ணா பல்கலைக்கழக 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து நேராக சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 12 மணிக்கு சென்றார். இதையடுத்து 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, விமானத்தில் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் சிங் தாகூர்,

எல்.முருகன், தயாநிதி மாறன் எம்பி, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அரசு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: