ஆடி அம்மாவாசையை முன்னிட்டு திருச்சி சமயபுரம் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்...

திருச்சி: ஆடி மாதம் 2-வது  வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழகம் மட்டும்மில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதை யாத்திரையாகவும் வாகனங்கள் மூலமாகவும் வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் இருந்து பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. முடி காணிக்கை செலுத்தியும் கோவில் நுழைவு வாயில்  மற்றும் விளக்கு ஏற்றும் இடத்தில் நெய் தீபம் ஏற்றியும் தேங்கய் உடைத்தும் அவர்கள் அம்மனை வழிபட்டனர். மேலும் சிலர் குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும் அக்ணி சட்டி ஏந்தியும் மற்றும் அலகு குத்தியும் கோவிலை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.   நேற்று ஆடி அம்மாவாசை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கோவிலில் தங்கி இருந்தனர். இன்று காலையில் இருந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories: