ஒலிம்பியாட் போட்டிகளால் உலக அளவில் இந்தியாவுக்கு கவுரவம்: ஒன்றிய அமைச்சர் தாகூர் பேச்சு

சென்னை: இந்தியாவில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதன் மூலம் உலக அளவில் இந்தியாவுக்கு கவுரவம் மற்றும் சிறப்பும் கிடைத்துள்ளது என்று ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் தெரிவித்தார்.

 சென்னையில் நேற்று தொடங்கிய 44வது சர்வதேச சதுரங்க போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர்  செஸ் ஒலிம்பியாட் போட்டியை வாழ்த்திப் பேசும்போது முதலில், ‘தமிழில் வணக்கம்’ என்றும் பிறகு ‘சமஸ்கிருத்தில் நமஸ்தே’ என்று கூறி தனது பேச்சை தொடங்கினார். செஸ் விளையாட்டு போட்டியை இந்தியா முதல் முறையாக நடத்தும் போது கலந்து கொள்வது பெருமையாக இருப்பதுடன், இது ஒரு கவுரவத்தையும் எனக்கு கொடுக்கிறது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி, 75 நகரங்களை கடந்து இங்கு இன்று வந்துள்ளது. இந்த ஜோதி 27 ஆயிரத்து 277 கிமீ  தூரம் இந்தியாவில் சுற்றி  இங்கு வந்துள்ளது.

டெல்லியில் ராக்போர்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர், குஜராத், பஞ்சாப், உத்தராஞ்சல், உத்ரபிரதேஷ், ஆந்திரா உள்ளிட்ட 75 முக்கிய இடங்களை கடந்து இறுதியாக மாமல்லபுரம் வந்து சேர்ந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்க வந்துள்ள செஸ் வீரர்கள், ஆர்வலர்களையும் இந்தியாவின் சார்பில் வரவேற்கிறேன். இங்கு இந்த போட்டியில் பங்கேற்று ஆதரவு தருகின்ற அனைத்து நாடுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் உலக அளவில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. விளையாட்டுத்துறையின் கீழ் ரூ.1300 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை சேர்ந்த அதிகாரிகள், ஒன்றிய அரசின் விளையாட்டுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் அகில இந்த செஸ் கூட்டமைப்பு, ஆகியோர் இணைந்து இந்த போட்டி வெற்றி பெற உழைத்துள்ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: