கோவையில் 2 முறைக்கு மேல் வாகன விபத்துகளை ஏற்படுத்திய 500 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை: மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் பேட்டி

கோவை: கோவையில் 2 முறைக்கு மேல் வாகன விபத்துகளை ஏற்படுத்திய 500 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார். கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் 2 முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்திய 740 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 500 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது என்றார்.

350 செல்போன்கள் உரியவர்களுக்கு ஒப்படைப்பு:

கோவையில் கடந்த 4 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான 52 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான 149 போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்சோவில் இதுவரை 9 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது; இதர வழக்குகளை விரைந்து முடிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

குட்கா வழக்குகளில் 347 பேர் கைது:

கோவை மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடர்பாக 332 வழக்குகளை பதிவு செய்து 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறி குட்கா விற்பனை செய்த 332 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Related Stories: