தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் 400 ரூபாய் நாணயம் அறிமுகம்

கோவை: கோவை வடகோவை குஜராத் சமாஜில் நாணயவியல் சங்கத்தின் சார்பில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தபால்தலை சேகரிப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள், வடகோவை குஜராத் சமாஜில் நாணய கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், ஒன்றிய அரசு சீக்கியர் மதத்தின் 9வது மத குரு குரு டெக் பகதூர் 400வது பிறந்தநாளை முன்னிட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட 400 ரூபாய் நாணயத்தை சமீபத்தில் வெளியிட்டது. இதனை ஒன்றிய அரசு நாணய சாலையில் இருந்து பெற்று தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுபோன்ற புதிய நாணயங்கள் மற்றும் பழங்கால கரன்சி நோட்டுகள், தபால் தலைகள் ஆகியவை ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: