அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி: குரங்கு அம்மை பரவல் தடுக்க எல்லைகளில் கண்காணிப்பு

சென்னை: குரங்கு அம்மை பரவாமல் தடுக்க, தமிழக விமான நிலையங்கள் மற்றும் 13  கேரளா எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தயக்கம் இன்னும் இருந்து கொண்டு வருகிறது. பி.ஏ 4 மற்றும் பி.ஏ 5 கொரோனா வைரஸ் காரணமாக 24 மணி நேரத்தில் 50ல் இருந்து 60 பேர் வரை இறக்ககின்றனர். உலகில், 63 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகி உள்ளது. எனவே தமிழக விமான நிலையங்கள் மற்றும் 13 கேரளா எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: