கட்டி முடித்து 4 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாத ஊராட்சி மன்ற அலுவலகம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே ராமசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு, கடந்த 2019ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளாகியும் இந்த கட்டிடம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், இந்த கட்டிடத்தை புதர்மண்டி காணப்படுகிறது. தற்போது, பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில், போதிய இட வசதியின்றி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புதிய கட்டிடத்தை திறக்க ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி கோவிந்தசாமி முயற்சி செய்தார். ஆனால், திறக்கப்பட்ட ஒரே நாளில் அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த எழுலரசன் தம்பி செல்வகுமார், கட்டிட பணிக்கு பில் செலுத்தவில்லை, என்று கூறி புதிய கட்டியத்திற்கு பூட்டு போட்டு எடுத்துச் சென்று விட்டார். இதனால் 4 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. எனவே, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்தை திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: