10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா திரைப்பட குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா திரைப்பட குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரைத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு தேசிய விருதை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்து வருகிறது. அநத வகையில் 68-வது தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களில் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.

2020-ம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் 68-வது தேசிய விருது பட்டியலில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

தமிழில் சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த வசனம் என்று 2 விருதுகளை மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டது. மேலும் இயக்குநர் வசந்த் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டது.  

இந்தநிலையில், 10 தேசிய விருதுகளை வென்ற திரைப்பட குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68-வது தேசிய திரைப்பட விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி

சூர்யா, இயக்குநர் சுதா கொங்காரா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி

 உள்ளிட்ட சூரரைப்போற்று படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் வசந்த், நடிகை லட்சுமி பிரியா, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் அஸ்வின், நடிகர் யோகி பாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள்.

அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள்...

சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்..என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: