கர்நாடக மாநிலத்தில் மழை தணிந்திருப்பதால் அங்குள்ள அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைவு

தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் மழை தணிந்திருப்பதால் அங்குள்ள அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை அமைத்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை தற்போது குறைந்துள்ளது.

இதேபோல் கேரளாவிலும் வயநாட்டு பகுதியிலும் மழையின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக இரு அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இரண்டு அணைகளிலிருந்தும் நேற்று வினாடிக்கு 61,444 கனஅடியாக இருந்த நீர் திறப்பு தற்போது 47,936 கனஅடியாக குறைந்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு மீண்டும் நீர்வரத்து வினாடிக்கு 65ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று காலை வினாடிக்கு 65ஆயிரம் கனஅடியாக இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 80ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 65ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. எனினும் ஒகேனக்கல் பிரதான அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு 12வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: