தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூரும் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூலை 23,24,25ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றும், நாளையும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

Related Stories: