பெரியார் பல்கலைக்கழக விவகாரம் குறித்து உயர்மட்ட குழு பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: பெரியார் பல்கலை கழக வினாத்தாள் சர்சை குறித்து விசாரிக்க, அமைக்கப்பட்ட குழு, தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டு கல்வி கலை விளையாட்டு துறை அமைச்சர் டேவிட் டெம்பில்மேன் சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்கு பின்பு நிருபர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி: ஆஸ்திரேலியா பல்கலை கழகங்களுடன் நமது பல்கலை கழகங்களை தொடர்பு படுத்தும் நிகழ்சிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய மாணவர்கள் இங்கு வந்தாலும், நமது மாணவர்கள் அங்கு சென்று படித்தாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பெரியார் பல்கலைக் கழக விவகாரம் தொடர்பாக உயர் கல்வி துறையை சேர்ந்த அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றிதாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அரசிற்கு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான கௌரவ விரிவுரையாளர்கள் டி.ஆர்.பி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்பபட்டு பணி அமர்த்த படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

3 பேர் கொண்ட உயர்மட்ட குழு

உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை: சேலம், பெரியார் பல்கலை கழகத்தில் முதுநிலை வரலாறு பாட பிரிவிற்கு நடத்தப்பட்ட 2வது பருவ தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விசாரணை மேற்கொள்ள உயர்கல்வி துறை அரசு இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெறும். இந்த குழு ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

Related Stories: