சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண 152 மாணவர்களுக்கு அனுமதி: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண, 152 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் தனியார் நட்சத்திர ஓட்டலில் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடக்க உள்ளது. போட்டி நடைபெற, உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் நேரில் வந்து 52 ஆயிரம் சதுர அடியில் புதிய அரங்கத்தினுள் எலக்ட்ரானிக்ஸ் செஸ் போர்டு அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, இரு அமைச்சர்களும் டேபிளில் அமர்ந்து செஸ் விளையாடினர். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை நிர்வாக அலுவலர் சங்கர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, சென்னை - புதுச்சேரி நிலம் எடுப்பு டிஆர்ஓ நாராயணன், முதன்மை அலுவலர் மற்றும் ஒலிம்பியாட் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘சர்வதேச ஒலிம்பியாட் போட்டி இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. தமிழக, முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் செஸ் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.பள்ளி கல்வித்துறையை, பொறுத்த வரைக்கும் பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், அதன் பிறகு அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 304 பேரும், அதிலிருந்து மாநில அளவில் 152 தேர்வு செய்து, இந்த விளையாட்டு போட்டியை நேரில் வந்து பார்வையிட இருக்கின்றனர். தேவைப்படும்போது, சர்வதேச வீரர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த  புதுப்பட்டினத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள பழங்கால கட்டிடங்களை பார்வையிட்டு இந்த கட்டிடங்கள் எந்தாண்டு கட்டப்பட்டது. அதன் உறுதித்தன்மை என்ன என்பது குறித்தும், எத்தனை மாணவ - மாணவிகள் படிக்கின்றனர், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளார்களா என்பது பற்றி ஆய்வு செய்து கேட்டறிந்தார். அப்போது  புதுப்பட்டினம் அரசு பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் இதே புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த ப.அப்துல் சமது அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒரு  கோரிக்கை மனுவை அளித்தார். அதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் இப்பள்ளியில் பயில்வதால் மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  

போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லை, அதேப்போல், போதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை எம்எல்ஏ அப்துல் சமது அமைச்சரிடம் வழங்கினார்.இந்த ஆய்வின்போது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு, மணப்பாறை தொகுதி எம்எல்ஏ ப.அப்துல் சமது, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி. அரசு, புதுப்பட்டினம் முன்னாள் தலைவர் பக்கீர் முகமது, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், மாவட்ட பிரதிநிதி ஆயப்பாக்கம் பாஸ்கர், வாயலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிங் உசேன், பள்ளியின் தலைமையாசிரியை ஸ்ரீவித்யா, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தாஜுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: