கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு கருத்து சொல்கிறேன்: எடப்பாடி பேட்டி

சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்த்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின் எடப்பாடி கூறினார்.சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாணவியின் பெற்றோர்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. விசாரணையில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்த்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும்.

இந்த சம்பவம் கடந்த 13ம் தேதியே நடந்துவிட்டது. அந்த பள்ளியை சேர்ந்த தாளாளர், செயலாளர், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இவை அனைத்தும் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். மாணவியின் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையும் இதுதான். ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து அப்போதே நான் குறிப்பிட்டேன். 30 ஆண்டுகாலம் அதிமுக இந்த மண்ணில் ஆட்சி செய்தது. பிரதான எதிர்க்கட்சி. எங்கள் கட்சி அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி உள்ளே நுழைவதாக வந்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தோம். சென்னை மாநகர் காவல் ஆணையரிடமும் நேரடியாக சென்று புகார் அளித்தோம். இவ்வளவு செய்தும்,  ரவுடிகளும், குண்டர்களும் நுழைந்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: