மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் இந்தோரிலிருந்து  புனே நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து ஆபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகிருக்கிறது. இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15 பேர் மீட்கப்பட்டிருப்பதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல் தெரிவித்திருக்கிறார்.  40-க்கும் மேற்பட்டோர் இந்த பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள். மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் கல்காட் என்ற பகுதியில் இருக்கக்கூடிய சஞ்சய் எனும் பாலத்தில் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென்று நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி பேருந்து கீழே விழுந்தது.

நிறைய பேர் மீட்கப்பட்டிருகின்றார்கள். சிலரின்  உடல்கள் இன்னும் காணப்படவில்லை. அவர்களை தேடும் முயற்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறைகளும் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டனர். இருப்பினும் நிறைய பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அஞ்சப்படுகிறது. உடனடியாக மீட்புப்படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலம் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதாகவும், தூரல் மழை பெய்து வருவதன் மூலமாகவும் மீட்புபணி என்பது சற்று  தொய்வுடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் உடனடியாக  அந்த பகுதிக்கு விரைந்திருப்பதாகவும் சிகிச்சை பெற கூடியவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்குவற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுருப்பதாக மத்தியபிரதேச அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விரிவான விசாரனை மேற்கொள்ளப்படும் எனவும் மத்தியபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் இன்னும் தேடப்படும் நிலையில் பணியானது நடந்து வருவதாகவும் சொல்லபடிகின்றது. எனவே 20 பேர் காணாமல் போயிருப்பதாகவும் 18 நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories: