அமர்நாத் யாத்திரையில் 17 நாளில் 50 பக்தர்கள் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. இதுவரையில் 1.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கரடுமுரடான மலைப் பாதையில் அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், உடல்நிலை பாதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நடுவழியில் இறந்து வருகின்றனர். கடந்த 17 நாட்களில் இதுபோல் 35 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 8ம் தேதி அமர்நாத் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 15 பக்தர்கள் அடித்து செல்லப்பட்டு இருந்தனர். இதன் மூலம், இந்த யாத்திரையில் இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: