முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தாமதமாவதால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை இந்த மாதம் வெளியிட வேண்டும்; அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தாமதமாவதால், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை இந்த மாதமே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு மாதத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டோம். எனவே, சிபிஎஸ்இ தேர்வு முடிகளை உடனடியாக வெளியிட்டு மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 15ம்தேதி சிபிஎஸ்சி தேர்வு முடிவு வெளியாகும் என்பது மிகவும் தாமதம். இந்த மாதமே வெளியிட வேண்டும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்பு, நாங்கள் 5 நாள் அவகாசம் கொடுக்கிறோம் என்றால் அட்மிஷன் தேதி எல்லாம் தள்ளிப் போகும். முதலாம் ஆண்டு சேர்க்கை மட்டும் சிபிஎஸ்இ முடிவு வந்த பிறகு நடைபெறும்.

ஆரியர்கள், கிரேக்கர்கள் காலத்தில் இருந்து வந்தவர்கள் தான். நம்மை பொறுத்தவரை இன்று இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ எந்த வேறுபாடுகள் இல்லாமல் மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழக முதல்வர் திராவிட மாடல் என்று சொல்லியிருக்கிறாரே தவிர எந்த மத வெறியையும் தூண்டுவதற்காக அல்ல. இந்த நேரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கவர்னரும், ஒன்றிய அமைச்சரும் புதிய கல்விக் கொள்கை பற்றி பேசியிருக்கிறார்கள். மாணவர்களிடம் அதுபற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

ஒன்றிய இணை அமைச்சர், புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், ‘புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையைத் தான் வலியுறுத்துகிறார்கள்.

 அரசு பணிகளுக்கான தேர்வு எழுதும் போது, தமிழ் ஒரு பேப்பர் இருக்கும் என்று அறிவித்தவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். எனவே தமிழ் படிக்கவும், தமிழை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எல்லாம் உருவாக்கி இருப்பது நாம் தான். அதைத் தான் திராவிட மாடல் என்கிறோம்.திராவிட நாகரீகம் என்ற கூற்று தொடர்பாக இன்றும் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: