அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தை அங்கிகரிக்க கூடாது: ஓ. பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தை அங்கிகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுத்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லாது என்று பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதனும் தலைமை நிலை செயலாளராக எஸ்.பி. வேலுமணி நியமிக்க படுவதாக அக்கட்சி இடைக்கால துணை செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் அமைப்பு செயலாளர்கழக நியமிக்க படுவதாகவும் பழனிசாமி அறிவித்தார். பழனிசாமி அறிவித்த இந்த நியமத்தை அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில் சட்ட விதிகளுக்கு எதிராக இந்த நியமனம் நடைபெற்று இருப்பதாகவும் இது தொரடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால், இந்த நியமத்தை அங்கிகரிக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஏற்கனவே அனுப்பியுள்ள மனுவில் பரிசீலனை செய்து பொதுக்குழு தீர்மானகள் பொறுப்பாளர்கள், தீர்மானகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என  ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரைந்து ஆய்வு செய்து கட்சி நிர்வாக, அதிகாரத்தையும் இரட்டை இல்லை சின்னத்தையும் தனக்கே வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: